"மாஸ்டர்" - செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..!


கைதி என்ற ப்ளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து "மாஸ்டர்" என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி இந்த படம் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

படத்தின் 50% பணிகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இப்போது அது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன் படி, நாளை மறுதினம் நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்தநாளான ஜனவரி 16-ம் தேதி இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் எனவும், இதில் விஜய் சேதுபதியின் கெட்டப்பும் இடம் பெறும் எனவும் கூறுகிறார்கள்.

"மாஸ்டர்" - செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..! "மாஸ்டர்" - செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..! Reviewed by Tamizhakam on January 13, 2020 Rating: 5
Powered by Blogger.