"படம் இப்படித்தான் இருக்கும், நடிக்கிறியா..?" என்று கேட்டார் - நான் ஒப்புக்கொண்டேன் - நடிகை நிகிலா விமல் ஒப்பன் டாக்


வ்யாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வெளியான படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். 

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். 

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். 

அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம். படமும் இப்படித்தான் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். 

அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். 

ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது, சூர்யா-ஜோதிகா மற்றும் அவர்களின் குடும்ப வழக்கம் என நினைக்கிறேன்.

சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கேரக்டருக்காக எப்படி எல்லாம் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். 

ஆகையால், நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கிறது. என்று கூறியுள்ளார் நிகிலா விமல்,

"படம் இப்படித்தான் இருக்கும், நடிக்கிறியா..?" என்று கேட்டார் - நான் ஒப்புக்கொண்டேன் - நடிகை நிகிலா விமல் ஒப்பன் டாக் "படம் இப்படித்தான் இருக்கும், நடிக்கிறியா..?" என்று கேட்டார் - நான் ஒப்புக்கொண்டேன் - நடிகை நிகிலா விமல் ஒப்பன் டாக் Reviewed by Tamizhakam on January 11, 2020 Rating: 5
Powered by Blogger.