"என்னோட புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும்" - ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா ஆனந்த்.!


சமூகவலைதளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் முரட்டு குத்து நடிகை அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிக் ஏற்றும் நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். 

அவர் கூறுகையில், நான் ஒரு ஹேப்பி சிங்கிள், வருங்கால கணவர் ஜென்ட்டில்மேனாக இருக்க வேண்டும். என்னை நிறைய காதலிக்க வேண்டும். 

நகைச்சுவை உணர்வு மிக்கவராக, ஜாலியாக ரொமான்டிக்காகவும், சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு பாடவும், நடனமாடவும், சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக தாடி வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள்,நீங்கள் வெளியிட்ட பார்ட்டி வீடியோவில் உங்களுக்கு லிப்-லாக் கொடுத்த அந்த நபர் யார்..?ஒரு ஆணுக்கு லிப்-லாக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு நான் சிங்கிள் என கூறுகிறீர்கள். ஒரு வேளை பாய் பெஸ்டியா..? -இந்த பாய் பெச்டீஸ் தொல்லை தாங்க முடியலப்பா.. என்று கருத்து கூறி வருகிறார்கள்.

"என்னோட புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும்" - ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா ஆனந்த்.! "என்னோட புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும்" - ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா ஆனந்த்.! Reviewed by Tamizhakam on January 08, 2020 Rating: 5
Powered by Blogger.