தர்பார் படத்தில் மீண்டும் அஜித்தை சீண்டிய ரஜினி - இதெல்லாம் தேவையா..? - கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!


கடந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வந்து இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. 

இந்த படங்களின் ட்ரெய்லர்கள் வெளியான போது இருந்த கிரேஸி லெவல் என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும். பேட்ட படத்தின் ட்ரெய்லரில் எவனுக்காச்சும்.. பொண்டாட்டி.. கொழந்த..குட்டி.. சென்டிமென்ட் கிண்டிமென்ட்ன்னு இருந்தா அப்டியே ஓடி போயிடு.. கொல காண்டுல இருக்கேன். மவனே.. கொல்லாம விடமாட்டேன் என்று ஒரு வசனத்தை பேசியிருப்பார். 

இது விஸ்வாசம் அஜித்தை தான் தாக்குகிறார் என்று கூறினார்கள். காரணம், இந்த படம் வெளியாகும் முன்பே அப்பா-மகள் செண்டிமென்ட் படம் என்று சிறுத்தை சிவா கூறியிருந்தார். அதனை வைத்து தான்.. பொண்டாட்டி.. கொழந்த குட்டி.. செண்டிமென்ட் இருந்தா ஓடிபோயிடு என்று வசனத்தை பேட்ட படத்தில் வைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

அதற்கு அடுத்தபடியாக வந்த விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் தான் பரபரப்பை பற்ற வைத்து ரசிகர்களின் கிரேஸி லெவலை எகிற வைத்தது. விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரில் நடிகர் அஜித் "பேரு தூக்கு துரை தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார் பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பெரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா". 

இது இரு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இந்நிலையில், இன்று (ஜனவரி 9) வெளியாகியுள்ள "தர்பார்" படத்தில் ஒரு காட்சியில் வில்லனிடம் " உன்னோட ஊரு, பேரு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு நான் என்ன கேபிள் கனெக்ஷனா குடுக்க போறேன்" என்று கிண்டலாக ஒரு வசனத்தை பேசியுள்ளார் ரஜினி. 


இதனை கேட்ட ரசிகர்கள் பலரும், விஸ்வாசம் அஜித்தின் வசனத்தை தாக்கி தான் இந்த வசனத்தை வைத்துள்ளார். ரஜினி ஒரு பக்கம் இருக்கட்டும். தனக்கு அறிமுகத்தை கொடுத்த அஜித்திற்கு எதிராகவே வசனத்தை வைத்துள்ளாரே முருகதாஸ் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

தர்பார் படத்தில் மீண்டும் அஜித்தை சீண்டிய ரஜினி - இதெல்லாம் தேவையா..? - கடுப்பில் அஜித் ரசிகர்கள்..! தர்பார் படத்தில் மீண்டும் அஜித்தை சீண்டிய ரஜினி - இதெல்லாம் தேவையா..? - கடுப்பில் அஜித் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.