"கடுமையான வலியில் துடிக்கும் போதும் அஜித் கூறிய அந்த விஷயம்" - நடிகர் ராஜ்கிரண் பிரமிப்பு


நடிகர் அஜித் பல விபத்துகளை சந்தித்து பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், "கிரீடம்" பட ஷூட்டிங்கிற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அறுவை சிகிச்சை ஒன்றை செய்திருந்தார். 

அதனால், பட ஷூட்டிங்கில் இருக்கும்போது அவர் வலியால் அதிகம் அவதிப்படுவாராம். அதை நேரில் பார்த்த நடிகர் ராஜ்கிரண் இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது, படப்பிடிப்பில் ஒரு ஷாட் முடிந்தபிறகு அஜித் உட்காரவே மாட்டார், நடந்துகொண்டே இருப்பார். ஏன் இப்படி பண்றாரு என்றே தெரியவில்லை. விசாரித்த பின்னர் தான் அவர் வலியை சமாளிக்க இப்படி செய்கிறார் என்பது தெரிய வந்தது. 

அதன் பிறகு, நான் அஜித்திடம் சென்று ரெம்ப வலியா இருந்தார் ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ப்ரொட்யூசர் கிட்ட கேட்கலாமேன்னு சொன்னேன். அதற்கு பதில் அளித்த அஜித் " நான் வலியில் கஷ்டப்படுகிறேன். இது நேரில் பார்க்கும் உங்களுக்கு புரிகிறது. ஆனால், தயாரிப்பாளர் பாலாஜி சார் சென்னையில் இருக்கிறார். அவருக்கு புரியுமா? ஷூட்டிங்கை ஒரு நாள் தள்ளி வைத்தால் மற்றவர்கள் தவறாக பேசுவார்கள். மற்ற ஆர்டிஸ்ட்களுக்கும் ஒரு நாள் வேஸ்ட். செலவும் வேஸ்ட். அவரோட மனசு நோக நான் காரணமாகமாட்டேன்" என கூறினாராம். 

இதை கேட்டு ஆச்சர்யப்பட்டு போனதாக ராஜ்கிரண் பிரமிப்புடன் கூறியுள்ளார்.

"கடுமையான வலியில் துடிக்கும் போதும் அஜித் கூறிய அந்த விஷயம்" - நடிகர் ராஜ்கிரண் பிரமிப்பு "கடுமையான வலியில் துடிக்கும் போதும் அஜித் கூறிய அந்த விஷயம்" - நடிகர் ராஜ்கிரண் பிரமிப்பு Reviewed by Tamizhakam on January 26, 2020 Rating: 5
Powered by Blogger.