"நான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை ட்ரோல் பண்ணாதிங்க" - இளம் நடிகர் வேண்டுகோள்


கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமி. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என சமீபத்தில் சில தகவல்கள் பரவியது. 

ஆனால், குமாரசாமி தரப்பு இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதை தற்போது, தன்னுடைய திருமணம் பற்றி அறிவித்துள்ளார் நிகில் குமாரசாமி. 

இது குறித்து அவர் கூறியதாவது, நான் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளேன். அவர் விஜயநகர் MLA கிருஷ்ணப்பாவின் உறவினர் ஆவார். இது என் பெற்றோர்களால் ஏற்பாடு செய்த திருமணம். 

பொதுவாக என்னை பலரும் தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வருகிறார்கள். எனக்கு அது பழகிப்போய்விட்டது. ஆனால், எனக்கு மனைவியாக போகும் ரட்சிதாவை யாரும் ட்ரோல் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் ஆண்கள் போல அல்ல. அவர்கள் மிகவும் சென்ஸிட்டிவ் ஆனவர்கள். அவர்களை பற்றிய சிறிய விஷயங்கள் கூட அவர்களை பெரிய அளவில் அதிகம் பாதிக்கும்" என கூறியுள்ளார்.


தனது வருங்கால மனைவி மீதான இவரது அக்கறை பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது.
Advertisement

Share it with your Friends