தர்பார் படத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் - வழக்கறிஞர் எச்சரிக்கை - வெடித்த சர்ச்சை..!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "தர்பார்" படம் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் ரஜினி மும்பை நகர போலீஸ் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தில் பல இடங்களில் அரசியல் பிரமுகர்களை தாக்கும் படியான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த வகையில், ஒரு காட்சியில், "சிலர் சிறையில் இருந்து ஷாப்பிங் கூட போய்ட்டு வராங்க" என கூறியிருப்பார் ரஜினி. 

இது வேறு யாரையும் அல்ல. பிரபல அரசியல் பிரமுகர் சசிகலா பற்றியது என்பதால் சசிகலா தரப்பில் தர்பார் படக்குழுவிற்கு இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. 

"அந்த காட்சியை உடனே நீக்கவேண்டும். அப்படி, நீக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் - வழக்கறிஞர் எச்சரிக்கை - வெடித்த சர்ச்சை..! தர்பார் படத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் - வழக்கறிஞர் எச்சரிக்கை - வெடித்த சர்ச்சை..! Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.