மாஸ்டர் ரிலீஸ் தேதி இது தான் - அப்போ கலெக்ஷன் பிச்சிக்கும்..!


‛பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். விஜய் கல்லூரி மாணவன், பேராசிரியர் என இரண்டு விதமான பாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

கோடை விடுமுறை ஸ்பெஷலாக இந்த படம் வெளிவரும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது ஏப்ரல் 09-ம் தேதி வியாழக்கிழமை இந்த படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுப்பற்றி விசாரித்ததில், ஏப்ரல் 10-ம் தேதி புனித வெள்ளி வருகிறது. அன்று விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும், இடையில் திங்கள் ஒருநாள் மட்டுமே வேலை நாள். அதற்கடுத்து தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை.

ஆகவே இந்த தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த தேதியில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் வியாபாரமும் படப்பிடிப்பு முடியும் முன்பே நடந்து முடிந்துவிட்டதால் "மாஸ்டர்" படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisement

Share it with your Friends