சினிமாவில் நிலைக்க வேண்டுமானால் இதை செய்ய வேண்டும் - ஸ்ரேயா ஒப்பன் டாக்..!


நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சில காலம் கணவருடன் உலகம் சுற்றி வந்தார். என்ன செய்வது..? சுற்றுவதற்கு ஒரு உலகம் தானே இருக்கின்றது. இதனால், மீண்டும் தன்னுடைய சொந்த உலகமான சினிமாவிற்கு திரும்பி வந்து விட்டார் ஸ்ரேயா.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர்,எனக்கு கல்யாணம் ஆகி இரண்டுஆண்டுகள்ஆகின்றது. ஆனால்,நான் இப்போதும் படங்களில் நடித்து வருகிறேன். அடுத்தடுத்து நான் நடித்துள்ள படங்கள ரிலீஸ் ஆகவுள்ளன.

மேலும், சில தமிழ் படங்களில் நடிக்கபேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற விஷயமெல்லாம் கிடையாது.

நல்ல திறமை உள்ளவர்கள், கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே சினிமா இடம் கொடுக்கும். அதனால், கஷ்டப்பட்டு வேலைகளை செய்வது தான் முக்கியம். இப்போது சினிமாவை போல வெப் சீரியஸ்களும் எடுக்கபட்டு வருகின்றன. சினிமாவில் உள்ளது போல வெப் சீரிஸ்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை. சொல்ல நினைக்கும் விஷயத்தை சொல்லலாம்.

நல்ல கதையம்சம் கொண்ட வெப்-சீரிஸ் வாய்ப்பு கிடைத்தால் வெப் சீரிஸிலும் நடிக்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளார் அம்மணி.
Advertisement

Share it with your Friends