ஆஸ்கார் வென்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" சிறுவன் போதை பழக்கத்தால் எப்படி ஆகிவிட்டார் பாருங்க..! - பலரையும் அதிர வைத்த தகவல


கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளை குவித்த திரைப்படம் "ஸ்லம்டாக் மில்லியனர்". வெறும் 15 கோடியில் புதுமுக நடிகர் நடிகைகள் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுதும் 377 கோடி ரூபாயை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.

இந்த படத்தில்அசாருதின் முகமது இஸ்மாயில் என்ற சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை பெற்றார். இவர் நிஜ வாழ்க்கையிலேயே சேரியில் பிறந்து வழர்ந்தவர் தான். இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார்.

படத்தில் நடிக்கும் முன்னர் இவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. சேரியில் பத்துக்கு பத்து என்ற அளவில் உள்ள தகர கொட்டாய் தான் இவரது வீடு. இதனை அறிந்த படத்தின் இயக்குனர் படம் வெளியான கையேடு இவருக்கு 45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு ஒன்றை வாங்கிகொடுத்தார்.

ஆனால், காலஓட்டம் அந்த சிறுவனை மீண்டும் பத்துக்கு பத்து என்ற தகரகொட்டாய்க்கு அனுப்பிவிட்டது வேதனையான விஷயம். ஆம், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு பெரிய பட வாய்புகள் எதுவும் இல்லாததால் கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார் அசார்.

ஒரு கட்டத்தில் குடி மற்றும் பிற போதை பழக்கங்களுக்கு அடிமையாடியுள்ளார் அசார். மேலும், குடும்பத்தின் கடன் சுமை வேறு அதிகரித்துகொண்டே சென்றுள்ளது. இதனால், தனக்கு பரிசாக கிடைத்த 45 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று விட்டு இப்போது மீண்டும் சேரிக்கே வந்து விட்டார் அசார்.

நல்ல வாழ்கை கிடைத்தும் போதை பழக்கம் இவரை மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு வந்து விட்டுவிட்டது. போதை பழக்கத்தால் சொத்து பத்துக்களை இழந்த எவ்வளவோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். அந்த பட்டியலில் தேசிய விருது பெற்ற படத்தில் நடித்தவர் தன்னையும் இணைத்து கொண்டதற்கு காரணம் போதை பழக்கம் மட்டும் தான்.

போதை பழக்கம்அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால், பின்னாலில் ஏன் இந்த போதை பழக்கத்திற்கு ஆளானோம் என்று ஒவ்வொரு நாளும் நம்மை நாமே திட்டிக்கொள்ளும் அளவுக்கு கொண்டு வந்து விட்டுவிடும்.

உங்களுக்கு போதை பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள். அல்லது குறைத்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒட்டத்தில் உஷாராக இல்லையென்றால் வாழ்க்கை நம்மை தனக்குள் இழுத்துகொள்ளும்.

ஆஸ்கார் வென்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" சிறுவன் போதை பழக்கத்தால் எப்படி ஆகிவிட்டார் பாருங்க..! - பலரையும் அதிர வைத்த தகவல ஆஸ்கார் வென்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" சிறுவன் போதை பழக்கத்தால் எப்படி ஆகிவிட்டார் பாருங்க..! - பலரையும் அதிர வைத்த தகவல Reviewed by Tamizhakam on January 30, 2020 Rating: 5
Powered by Blogger.