காதலனுடன் நெருக்கமான போஸ் - காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை - வைரலாகும் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படம்..!


தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்கை பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து, சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து மக்களை கவர்ந்தார். 

சின்னத்திரையை தொடர்ந்து அவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். 

சமீபகாலமாக, அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். இந்த நிலையில் தன்னுடைய காதலன் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார் அம்மணி.

அவரது, பிறந்தநாளான நேற்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு யாரை திருமணம் செய்ய போகிறேன் என்பதை கூறியுள்ளார். இதனால் ஷாக் ஆகிப்போனர்கள் ரசிகர்கள்.

மேலும், இந்த அழகான ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends