அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்திக்கொண்டார் - பிரபல நடிகை பகீர் புகார்


நடிகை மீராவாசுதேவன் தமிழில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில்மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனால், எந்த படமும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுக்கவில்லை. 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார்.

கடந்த 2005-ம் ஆண்டுவிஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2010-ம் அவரை விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு மலையாள நடிகர் ஜான் கொக்கன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், 2016-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்த இவருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது சினிமாவில் மீண்டும் என்ட்றியாகியுள்ள இவருக்கு தன்மத்ரா படம் ஒரு திருப்பு முனையாக அமைந்த்துள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், தனது மேனேஜர் மீது சரமாரியான புகார்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியதவாது, மேனஜர் என்னை அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பயன்படுத்தி கொண்டார். எனக்கு வந்த பல நல்ல பட வாய்புகளை என்னிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டார். எனக்கு மொழி பிரச்சனை இருந்த காரணத்தினால் தான் மேனஜர் கூறியதை எல்லாம் கேட்டேன்.

அவர் கூறிய படங்களில் நடித்தேன். ஆனால், எல்லா படங்களும் தோல்வியிலேயே முடிந்தன. இப்போது, நானே கதை கேட்டு நடிக்க தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்திக்கொண்டார் - பிரபல நடிகை பகீர் புகார் அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்திக்கொண்டார் - பிரபல நடிகை பகீர் புகார் Reviewed by Tamizhakam on January 16, 2020 Rating: 5
Powered by Blogger.