முதன் முறையாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா வெளியிட்ட க்யூட் புகைப்படம் -குவியும் லைக்குகள்..!


தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் ஒருவர் சினேகா. 2000 ஆம் ஆண்டில் “என்னவளே”படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவரது முதல் படம் "விரும்புகிறேன்". ஆனால் அதற்கு முன்னே "என்னவளே" படம் வெளிவந்தது. 

நடிகை சினேகா கவர்ச்சி பாத்திரம் ஏற்காமலே இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 2000 ஆம் காலகட்டதில் இவரது போட்டோ அனைத்து நகர வீதிகளில் உள்ள கடைகளை அலங்கரித்தது. 

அந்தளவு இவர் பிரபலமாக விளங்கினார். தமிழ் சினிமாவில் ராசியான நடிகை எனும் புகழ்பெற்றவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். 

“ஆனந்தம்”, “வசூல் ராஜா”, “புதுப்பேட்டை”, “கிங்”, “உன்னை நினைத்து” என பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்தார். சேரன் இயக்கத்தில் இவரது“ஆட்டோகிராஃப்”, கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படம் இவரது நடிப்புத் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. 

தொடர்ந்து கவர்ச்சி களமிறங்கி கலக்கிய சினேகா நடிகர் பிராசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். 

தற்போது, மீண்டும் கர்ப்பமாக இருக்கும் இவர்நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை முதன் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.முதன் முறையாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா வெளியிட்ட க்யூட் புகைப்படம் -குவியும் லைக்குகள்..! முதன் முறையாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா வெளியிட்ட க்யூட் புகைப்படம் -குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.