வலிமை படத்தில் நடிக்கிறீங்களா..? நடிகர் பிரசன்னா பதில் - என்ன இப்படி சொல்லிட்டாரு..! - உச் கொட்டும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

எச். வினோத்தின் சொந்த கதையானஇந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் இந்த வருடம் தீபாவளிக்கு தான் என்பதால் பெரிதாக எந்த அப்டேட்டும் இன்னும் ஆறு மாதத்திற்கு வர வாய்ப்பில்லை.

படத்தில் ஹீரோயின் யார் என்பது கூட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை நடிகை யாமி கௌதம் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறுகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலானது. இதை தொடர்ந்து, ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியதற்கு நடிகர் பிரசன்னா "இன்னும் தெரியல, கன்ஃபார்ம் ஆகல" என்று பதிலளைதுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களாச்சும் ஒரு அப்டேட் குடுப்பீங்கன்னு பார்த்த இப்படி சொல்லிட்டீங்களே என்று உச் கொட்டி வருகிறார்கள். 

வலிமை படத்தில் நடிக்கிறீங்களா..? நடிகர் பிரசன்னா பதில் - என்ன இப்படி சொல்லிட்டாரு..! - உச் கொட்டும் ரசிகர்கள்..! வலிமை படத்தில் நடிக்கிறீங்களா..? நடிகர் பிரசன்னா பதில் - என்ன இப்படி சொல்லிட்டாரு..! - உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.