எல்லை மீற கூடாது - நடிகை ஆத்மிகா அறிவுரை..!


மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆத்மிகா இள வட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

ஆனால், ஒரு தரப்பு ரசிகர்கள் இவர் பெண் வேடம் போட்ட ஆண் போல இருக்கிறார் என்று கிண்டலடித்து வந்தனர். 

சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்ய ரசிகர்கள் எல்லை மீறி அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இது குறித்து பேசிய ஆத்மிகா, ''விமர்சனம் செய்வது தவறல்ல. ஆனால், நாகரிக எல்லையை மீறக்கூடாது,'' என கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends