"சார்க்கு கதை புடிச்சுபோனதும் எனக்கு புது பைக் வாங்கு குடுத்தாரு..!" - அஜித் குறித்து பிரபல இயக்குனர்..!


தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜா நடிகர் அஜித்தின் குணம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. உன்னோட வேலையை நீ பாரு. என்னோட வேலையை நான் பாக்குறேன். வாழு வாழ விடு. அவ்வளவே தான் அஜித்தின் கொள்கை. 

இதனை, ரசிகர்கள் தாண்டி பல திரைப்பிரபலங்களும் பேசி நாம் கேட்டிருப்போம். படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மரியாதை கொடுத்து பேசுவார். சின்ன வயசு பையனை கூட வாங்க போங்க என்றே அழைப்பது இவரது வழக்கம். 

சில சமயங்களில், அனைவருக்கும் சேர்த்து பிரியாணி செய்வார் என்றும் பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில், அஜித் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது, சார்கிட்ட "வாலி" படத்தோட கதையை சொன்னேன். கதையை பொறுமையாக கேட்ட அவருக்கு கதை ரொம்பவும் புடிச்சு போச்சு. உடனே எனக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்தாரு. எனக்கு ரொம்ப சந்தோசம் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம், படம் முடிஞ்சு முதல் காப்பியை பார்த்துட்டு படமும் ரொம்ப புடிச்சு போக உடனே எனக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தாரு" என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends