"பட வாய்ப்பு வேண்டுமா.? என்னுடன் படுக்க வேண்டும் என்று கூறினார் " - பிரபல இளம் தமிழ் நடிகை வேதனை..!


காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

மேலும், மணிரத்தினம் இயக்கம் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ளஅழைத்தார் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து சினிமா நடிகைகள் MeToo புகார்களை எழுப்பி வரும் நேரத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் இந்த புகாரை எழுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சினிமாவில் நடிக்கவேண்டு மென்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று தயாரிப்பாளர் என்னை கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே எனக்கு பல நாட்கள் ஆனது என கூறியுள்ளார் அதிதி. 

இவர் நடிப்பு, நடனம் மட்டுமல்லாமல் பாடுவதில் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோரியல் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிட்டராக அதிதிராவ் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பட வாய்ப்பு வேண்டுமா.? என்னுடன் படுக்க வேண்டும் என்று கூறினார் " - பிரபல இளம் தமிழ் நடிகை வேதனை..! "பட வாய்ப்பு வேண்டுமா.? என்னுடன் படுக்க வேண்டும் என்று கூறினார் " - பிரபல இளம் தமிழ் நடிகை வேதனை..! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.