போலீஸ் படத்தால் கடும் மன உழைச்சலில் இளம் நடிகை..! - ஒதுக்கும் இயக்குனர்கள்..!


நல்லா நடிக்கிறாரே என்று பெயர் வாங்கிய அந்த அழகான நடிகை கடந்த வருடம் நடித்த பிரபல போலீஸ் அதிகாரி பெயரில் நடன நடிகர் ஹீரோவாக நடித்த படத்தின் ஹீரோயினாக நடித்தார்.

அந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தான் படத்தை எடுத்தனர்.கோடை விடுமுறை என்றால் எப்படி படம் பத்து நாள் தாண்டும். நமக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிச்சம்.

அதன் பிறகு, தீபாவளிக்கு தளபதி நடிகரின் படத்துடன் வெளியாகும் என்றார்கள்.பிறகு,பொங்கலுக்கு மாமனார் படத்துடன் வெளியாகும் என்றார்கள்.ஆனால்,இந்த பொங்கலை மாமனாரும், மருமகனும் ஆக்கிரமித்து விட்டதால் மீண்டும் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு விட்டார்கள்.

இதனால், கடும் மன உழைச்சலில் இருக்கிறாராம் அழகான நடிகை. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆவதில் தாமதமானாலே அந்த படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு காணாமல் போய்விடும், அப்படியே வெளியானாலும் வந்த இடம் தெரியாமலும் போன தடம் தெரியாமலும் தான் போகும் என்பது வரலாறு.

அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டாலும் முன்னணிநடிகர்களின் படத்தில் நடிக்க முடியவில்லையே என்று புலம்பும் நடிகை. முன்னணி நடிகர்களின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு கொடுத்தால் கூட ஓகே என்று இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். 

ஆனால், வளர்ந்து விட்ட இந்த சினிமா யுகத்தில் பாடல்களை எல்லாம் ரசிகர்கள் விரும்புவதில்லை. படத்தின் கதையை மட்டும் தான் எதிர்பார்த்து ரசிகர்கள் வருகிறார்கள்.

முன்னணி நடிகர்களின் படங்களிலேயே இப்போதெல்லாம் அறிமுக பாடலை தவிர எந்த பாடலுக்கு முக்கியத்துவமே இல்லை. இந்த நிலையில், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் எல்லாம் செட் ஆகதுமா என்று ஒதுக்குகிறார்களாம் இயக்குனர்கள்.

போலீஸ் படத்தால் கடும் மன உழைச்சலில் இளம் நடிகை..! - ஒதுக்கும் இயக்குனர்கள்..! போலீஸ் படத்தால் கடும் மன உழைச்சலில் இளம் நடிகை..! - ஒதுக்கும் இயக்குனர்கள்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.