இதை எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? - குஷ்புவை பங்கம் செய்த நடிகை காயத்ரி ரகுராம்..!


சமீப காலமாக இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. ஒரு சட்டம், ஒரு நடவடிக்கை என்றால் எது அவர்களை பாதிக்கிறது, இவர்களை பாதிக்கிறது என வேண்டுமென்றே கிளப்பி விட்டு எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால்,இதனை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் போர்த்திவிடுவது ஏற்றுக்கொள்ள கூடியாத இல்லை. அந்த வகையில், சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். 

இதற்கும், மோடி தான் காரணம் சில கட்சிகள் கிளம்பின. இந்நிலையில்,போலீஸ் விசாரணையில் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மாறுவேடத்தில்தாக்கியது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் காயமே ஆகாத நிலையிலும் கட்டு போட்டுக்கொண்டு பயங்கரமான காயம் ஆனது போல காட்டிக்கொண்டு போராடி வரும் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஆண்கள் சட்டை மீதும், பெண்கள் புர்கா மீதும் கட்டு போட்டுக்கொண்டு தாக்கபட்டோம் என்று பச்சையாக பொய் கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பல்கலை மாணவர் ஒருவர் வலது கையில்கட்டு போட்டுகொண்டு போராடி, அடுத்த நாள் தவறுதலாக இடது கையில் கட்டு போட்டுக்கொண்டு வந்து விட்டார். 

இதனை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் நடிகை குஷ்புவை குறிப்பிட்டு, நீங்க என்னை விட சீனியர். மேக்கப் கண்டினியூவிட்டி எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? என்று அவரை வம்பிற்கு இழுத்துள்ளார்.

இதை எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? - குஷ்புவை பங்கம் செய்த நடிகை காயத்ரி ரகுராம்..! இதை எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? - குஷ்புவை பங்கம் செய்த நடிகை காயத்ரி ரகுராம்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.