"தர்பார்" இயக்குனர் முருகதாஸ் மீது கடும் அதிருப்தியில் நடிகை நயன்தாரா - என்ன காரணம்..?


முருகதாஸ் படம் என்றாலே ஹீரோயின்களுக்கு வேலையே இருக்காது. துப்பாக்கி காஜல் அகர்வால், கத்தி சமந்தா, ஸ்பைடர் ரகுல் பரீத் சிங், சர்கார் கீர்த்தி சுரேஷ் என சமீப காலமாக வெளியான படங்களே அதற்கு சாட்சி.

ஹீரோயினுக்கு வேலை இல்லை என்றால் எதற்கு அவர்களை நடிக்க வைத்து நான்கு பாடலுக்கு ஆடவிட்டு அவர்களுக்கென செயற்கையான காட்சிகளை திணித்து படத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.

படத்தின் நீளத்தை குறைத்தால் தியேட்டர் மின்சார செலவும், ரசிகர்களின் நேரமும் மிச்சமாகும் என்பது பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வெளியான தர்பார் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவின் நிலை படு மோஷம்.

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து 50 கோடி வசூல் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இப்படித்தான் படத்தில் நடிக்க வைத்து அசிங்கப்படுத்துவதா என்று நயன்தாராவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த விஷயம் தொடர்பாக, நயந்தாரவிற்கும் முருகதாஸ் மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.


"தர்பார்" இயக்குனர் முருகதாஸ் மீது கடும் அதிருப்தியில் நடிகை நயன்தாரா - என்ன காரணம்..? "தர்பார்" இயக்குனர் முருகதாஸ் மீது கடும் அதிருப்தியில் நடிகை நயன்தாரா - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.