பாதியில் நின்ற சிவகார்த்திகேயன் திரைப்படம் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் மகிழ்ச்சி


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமாருடன் இணைந்து ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் படத்தில் நடித்து வந்தார். 

ஆனால், அந்த படத்தின் பட்ஜெட் தாறுமாறாக சென்றால் பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டு பாதியில் நின்றது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அமைந்தது.

ஆனாலும், படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடரும் என படக்குழுவினர் சார்பில் கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கின்றனர். படம் பட்ஜெட்டில் தடுமாறுவதால் இந்த படத்திற்கான சம்பளத்தை நடிகர் சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்துள்ளார். 

அதனால் தான் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் ஒருவழியாக துவங்கியுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படம், கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் செய்யப்படவுள்ளது என கூறுகிறார்கள்.
Advertisement

Share it with your Friends