"சின்னத்தம்பி" படத்தில் குஷ்புவிற்கு அண்ணனாக நடித்த நடிகரின் கொடூர மரணம் - மனதை ரணமாக்கும் தகவல்..!


நடிகர் பிரபு நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் "சின்னத்தம்பி" இந்த படத்தில் குஷ்புவின் அண்ணனாக நடித்தவர் நடிகர் உதய பிரகாஷ்.

இதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வில்லன் வேடமேற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும் இவருடைய சினிமா வாழ்க்கை என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவரை அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் கைவிட்டுவிட்டனர்.\

இதனை தொடர்ந்து கடன் வாங்கி கடன் வாங்கி காலத்தை ஓட்டி வந்த இவருக்கு கடன் தொல்லை அதிகமாகவே சென்னையை காலி செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்த ஒரு துறவியின் உதவியில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இவரின் நிலை அறிந்த நடிகர் சரத்குமார் தன்னுடைய திவான் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனாலும், அந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனாதால் தவித்தார்.

பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அளவுக்கு அதிகமாக குடித்துசாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அளவுக்கு தள்ளபட்டார். இதனால், இவருடைய கல்லீரல் கெட்டுப்போனது. கடந்த 2004-ம் அளவுக்குஅதீதமாக மது அருந்திய இவர் நடிகர் சங்கம் உள்ளசாலையில் விழுந்து கிடந்தார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர் 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி மரணமடைந்தார்.
Advertisement

Share it with your Friends