இரண்டு முறை விஜய் பட வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் - விஜய் தொலைக்காட்சி பிரபலம்


தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் இன்று வரை தனக்கென ஒரு ஸ்டைல் தன் படங்களுக்கென ஒரு பாணி என பல தரப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பினால் நீங்க இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்.

சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கும் இவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் பலரும் ஆசை கொள்வார்கள். சமயம் கிடைக்கும் போது பேட்டிகளில் அந்த ஆசையை வெளிப்படுத்தவும் செய்வார்கள். 

அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் ஒளிபரப்பான "ஜோடி நம்பர் 1" மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கேப்ரில்லா அண்மையில் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களின் பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு நடிக்க வேண்டிய வாய்ப்பை கல்லூரி படிப்பிற்காக நான் தவறவிட்டேன் என்று கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends