"என் சட்டையை பிடித்து வாசலில் தள்ளினார்கள்" - இயக்குனர் பாரதிராஜா வேதனை..!


இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில்தவிர்க்க முடியாத இயக்குனர். சமீபத்தில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அதில் பேசிய அவர், தான் சந்தித்த மோசமான தருணங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். பிரபல விநியோகஸ்தரிடம் இரண்டு ரூபாய் தினக்கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தேன்.

நான் நாகேஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். அவர் நடிப்பில் வெளியாகவிருந்த "சர்வர் சுந்தரம்" படத்தை மீடியேட்டர்களுக்கு போட்டு காண்பிக்கவுள்ளார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. இதனை என்னுடைய முதலாளியிடம் கூறி என்னையும் படம் பார்க்க அழைத்து செல்லுங்கள் என கூறினேன்.

அவரும் என்னை அழைத்து சென்றார். இன்னும் ரிலீஸ் ஆகாத ஒரு படத்தை பார்க்கப்போகிறேன் என்ற ஆசையில் AVM ஸ்டூடியோவிற்கு சென்றேன். என் முதலாளியின் தியேட்டரின் உதவியுடன் உள்ளே நுழைந்து விட்டேன்.

படமும் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து கையில் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டு ஒருவர் வந்தார். நீ யாரு..? என கேட்டார். இவருடன் வந்தேன் என்று என்முதலாளியை காட்டினேன். ஆனால், அவர் என்னை யாரென்று தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

உடனே என்னுடைய சட்டையை பிடித்து கொண்டு வந்து வாசலில் தள்ளினார்கள். கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அப்போது முடிவு செய்தேன். இதே AVM ஸ்டூடியோவிற்கு நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ மீண்டும் வருவேன் என்று.

நாட்கள் கடந்தன, பிறகு அதே நிறுவனம் என்னை அழைத்து ஒரு படம் பண்ண சொன்னாங்க என்று கூறியுள்ளார் பாரதிராஜா.
Advertisement

Share it with your Friends