துளி மேக்கப் இன்றி நைட் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அஞ்சலி - வைரல் போட்டோஸ்..!நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். 

படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். 


இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் “சிந்துபாத்” என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் “நாடோடிகள் 2” படத்திலும் நடித்து முடித்துள்ளார். 


தற்போது, நைட்டியில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அஞ்சலியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.துளி மேக்கப் இன்றி நைட் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அஞ்சலி - வைரல் போட்டோஸ்..! துளி மேக்கப் இன்றி நைட் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அஞ்சலி - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.