போடு தகிட தகிட..! - பிரை லார்சன் ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் - கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகம் தயாராகிறது..!


மார்வெல் ஹீரோக்களின் அராஜகம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க கேப்டன் மார்வெல் என்ற கதாபத்திரத்தில் ஷீராவாக களமிறங்கி உலக அளவில் பிரபலம் அடைந்தார் நடிகை பிரை லார்சன்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உட்பட "ரூம்" , "தி கிரேட் வால்" என பல படங்களில் பிரை லார்சன் அசத்தியுள்ளார். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற உயரிய விருதுகளையும் லார்சன் பெற்றுள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்தில் ஹீரோக்கள் கலக்கினாலும் தானோஸ்-ஐ அழிக்க ஹீரோக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் கேப்டன் மார்வெல். இருந்தாலும், படம் முழுக்க ஹீரோக்கள் ஆக்கிரமித்து கொண்டதால் கேப்டன் மார்வெல்-லுக்கு போதுமான ஸ்பேஸ் கிடைக்கவில்லை. 

இது பிரை லார்சன் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. கவலை வேண்டாம் கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகத்தை கொடுக்கிறோம் என படப்பிடிப்பு பணிகளை தொடங்கிவிட்டது மார்வெல் ஸ்டூடியோஸ். 

இந்த தகவல் வெளியாகி பிரை லார்சன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Advertisement

Share it with your Friends