பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி - மகளுக்கு எழுதிவைத்த கடிதம் - அதிர்ச்சி தகவல்


தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

இந்நிலையில், தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார். 

இதனையடுத்து ஈஸ்வர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்நிலையில் காவல்நிலையம், நீதிமன்றம் என அழைந்த ஜெயஸ்ரீ தற்போது வீட்டில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தற்கொலைக்கு முன்பு பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவிற்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் இதுவரை தனக்கு கொடுத்த ஆறுதலுக்கு நன்றி, அவ்வப்போது தனது குழந்தையை பார்த்துக்கொள் என்று அனுப்பியுள்ளார். 

இதனையடுத்து வீட்டில் வந்த பார்த்தபோது ஜெயஸ்ரீ மயக்கமடைந்து காணப்பட்டதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசாரின் சோதனையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என தனது மகளுக்கு அறிவுரை வழங்கிய ஜெயஸ்ரீ தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

மேலும், தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கு அதே கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ.

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி - மகளுக்கு எழுதிவைத்த கடிதம் - அதிர்ச்சி தகவல் பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி - மகளுக்கு எழுதிவைத்த கடிதம் - அதிர்ச்சி தகவல் Reviewed by Tamizhakam on January 16, 2020 Rating: 5
Powered by Blogger.