இரண்டாவது முறையும் ஏமாற்றம் - பிரபல இயக்குனர் மீது கடுப்பில் நடிகை நயன்தாரா..!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டியன்று வெளியான "தர்பார்" படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். 

படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார். படத்தில் அவர் என்னவாக வருகிறார் என்று கூட தெரியவில்லை. ரஜினிக்கு ஜோடியாகவும் இல்லை. வில்லியாகவும் இல்லை. 

சாதரனமாக, ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர். ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். 

நடிகை நயன்தாரா ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. என்னிடம் ஒரு கதையை கூறினார். ஆனால், படத்தில் வேறு ஒன்றை எடுத்து வைத்திருந்தார்.

படம் வெளியான பிறகு தான் நான் இரண்டாவது ஹீரோயின் என்றே தெரிந்தது என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு அந்த படத்தில் நடித்ததுதான் என்றும் கூறியிருந்தார். 

இப்போது மீண்டும் தர்பார் படத்தில் தனது கதாபாத்திரத்தை சிதைத்து விட்டதாக அதிருப்தியில் இருக்கிறார்.
Advertisement

Share it with your Friends