"அவ Ex-Boyfriend கூட நைட் பார்ட்டியில.." - காதலி ஷனம் ஷெட்டி புகார் குறித்து தர்ஷன் கூறிய பகீர் தகவல்கள்..!


பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான விளம்பர நடிகரும் , மாடலுமான தர்ஷன் மற்றும் நடிகை ஷனம் ஷெட்டி காதல், நிச்சயதார்த்தம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ஷனம் ஷெட்டி நடிகர் தர்ஷன் என்னை காதலித்து திருமணம் செய்வதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு  இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் எனவும் என்னிடம் பல வகைகளில் பண உதவி பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன், அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷனம் ஷெட்டி என்னை பல வகைகளில் தொந்தரவு செய்தார்.

நான் ஹீரோவாக கமிட்டானபடங்களில் என்னை ஹீரோயினாக போடும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால், நான் இப்போது தான் படங்களில் நடிக்கவே ஆரம்பித்துள்ளேன். இவங்கள ஹீரோயினா போடுங்க என சொல்வதற்கு நான் அவ்ளோ பெரிய ஹீரோ இல்லை என்று கூறினேன்.

ஆனால், நான் கமிட்டான படங்களின் தயாரிப்பாளர்களை ஷனம் ஷெட்டி தொடர்பு கொண்டு அவனை ஹீரோவாக போடாதீர்கள். அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று பல புகார்களை கூறி என்னுடைய பட வாய்ப்புகளை பறித்து விட்டார். 

இதனால் தான் நான் படங்களில் நடிக்காமல் இருக்கிறேன். மேலும், நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவருடைய Ex-Boyfriend கூட நைட் பார்ட்டியில்இருந்துள்ளார்" இதனை என்னுடைய நண்பர்கள் கூறியுள்ளனர். 

இதற்கானஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதனை நான் கமிஷனர் அலுவலத்தில் காண்பிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends