MASTER - செகன்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் - தேதி மற்றும் நேரம் - அதிகாரபூர்வ அறிவிப்பு..! - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..!


அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. 

விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் போஸ்டரில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் செகண்ட் லுக்கை பொங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறது படக்குழு. 

எனவே நாளை வெளியாகும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக அமையும் என்பதில் ஐயமில்லை.

MASTER - செகன்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் - தேதி மற்றும் நேரம் - அதிகாரபூர்வ அறிவிப்பு..! - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! MASTER - செகன்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் - தேதி மற்றும் நேரம் - அதிகாரபூர்வ அறிவிப்பு..! - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.