"தல" or "தளபதி" - யாரை பிடிக்கும்..? - மழுப்பாமல் நச்சென பதில் கொடுத்த மேகா ஆகாஷ்..!


வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். 

இந்த படத்திற்கு முன்பே எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் அவர் நடித்திருந்தாலும், அதற்கு பிறகு உருவான வந்தா ராஜாவாதான் வருவேன் படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆனது.

தொடர்ந்து, பேட்ட படத்தில் நடிகைசிம்ரனின் மகளாக நடித்திருந்தார் அம்மணி. சமீபத்தில் தான் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியானது.பொசு பொசுவென வாட்ட சாட்டமாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பகிறது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படி படவாய்ப்புகள் இப்போது இவரது கையில் இல்லை.

இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மேகா ஆகாஷிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்..? தலயா..? தளபதியா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த கேள்விக்கு பலரும் மழுப்பளாகவே பதில் அளிப்பார்கள். ஆனால், மேகா ஆகாஷ் மழுப்பாமல் சட்டென "தளபதி"-யை தான் பிடிக்கும் என ஒரே போடாக போட்டுவிட்டார்.
Advertisement

Share it with your Friends