10 நொடியில் உயிர்தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால் - கோரவிபத்தை நேரில் பார்த்த பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "இந்தியன் 2" படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள EVP ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது. 

அதில் நேற்று இரவு திடீரென ஒரு கிரேன் சாய்ந்து விழுந்ததில் நசுங்கி 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை நேரில் பார்த்த ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் கமல்ஹாசன் உயிர் தப்பியது பற்றி பேசியுள்ளார். 

"நான், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மூவரும் 10 நொடிகளில் உயிர் தப்பியுள்ளோம். நாங்கள் சென்று அமரவிருந்த கூடாரம் மீது தான் கிரேன் சாய்ந்தது" என குறிப்பிட்டு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

10 நொடியில் உயிர்தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால் - கோரவிபத்தை நேரில் பார்த்த பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! 10 நொடியில் உயிர்தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால் - கோரவிபத்தை நேரில் பார்த்த பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.