12 வருடங்களுக்கு பிறகு ஹிந்தியில் ரீமேக் ஆகும் "பொல்லாதவன்" - பிக்பாஸ் "முட்ட கணேஷ்" யார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா..?


வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் இப்போது இந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் வெற்றிக் கூட்டணி முதன் முதலாக கைகோர்த்த படம் பொல்லாதவன். 

அதன் பிறகு அவர்கள் கூட்டணியில் உருவான ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என அனைத்துப் படங்களுமே கோலிவுட் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படங்கள்தான். 

இந்நிலையில் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து பொல்லாதவன் படம் இந்தியில் ’Guns of Banaras’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சேகர் சூரி இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 28ஆம் தேதி பிரமாண்டமாக இந்த படம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் பிக்பாஸ் முட்டை கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில், டேனியல் பாலாஜி நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் முட்டை கணேஷ்.

இது குறித்து அவர் பேசுகையில், ஹிந்தியில் எனக்கு இது முதல் படம். தமிழில் டேனியல் பாலாஜி நடித்த கேரக்டர்தான். ஆனால், இந்தியில் இந்த கேரக்டருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்றார்.

அந்த படத்தில் ட்ரெய்லர் இதோ,

Advertisement

Share it with your Friends