திருமணம் முடிந்த கையோடு மனைவி ஷாலினியிடம் சத்தியம் செய்து கொடுத்து 20 வருடமாக கடை பிடிக்கும் அஜித்..!


தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடி என்றால் அனைவர் மனதிலும் டக்கென நியாபம் வரும் பெயர் அஜித்-ஷாலினி தான். அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு, அனோஷ்கா குமார் மற்றும் ஆத்விக் குமார் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு மனைவி ஷாலினிக்கு அஜித் செய்து கொடுத்த சத்தியம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, வருடத்திற்கு ஒரு படதிற்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்க வேண்டும் எனவும் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது, அஜித்தின் உடல் நலத்திற்க்காகவும், குடும்பத்துடன் அவர் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே சத்தியம் வாங்கியுள்ளார் ஷாலினி அஜித்குமார். 

திருமணம் முடிந்து 20 வருடம் ஆகியும் இன்னும் அந்த சத்தியத்தை கடை பிடிக்கிறார் அஜித்.
Advertisement

Share it with your Friends