200 அழகிகளுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகை ஸ்ரேயா..! - வைரல் புகைப்படம்..!


கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற மலையாள படம் ‛மை பாஸ்'. திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தற்போது சண்டக்காரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார் ஆர்.மாதேஷ். திலீப் கேரக்டரில் விமலும், மம்தா மோகன்தாஸ் கேரக்டரில் ஸ்ரேயாவும் நடித்து வருகிறார்கள். 

படத்தின் கதை லண்டனில் நடப்பதால் முழு படப்பிடிப்பும் அங்கு நடந்து வருகிறது. ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார். ஸ்ரேயாவின் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளராக நடிக்கிறார் விமல். 

இந்தப்படத்திற்காக லண்டனில் பிசியான ஏரியாவான வாட்போர்டு ஏரியாவில் மிகப்பெரிய நடன அரங்கு அமைக்கப்பட்டு, நடன காட்சி படமாக்கப்பட்டது. லண்டன் நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனம் ஆடினார் ஸ்ரேயா. 


200 துணை நடிகர்கள் பங்கேற்க, 100 நடன கலைஞர்களுடன், விமல், சத்யன், புன்னகை பூ கீதா, என நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு நடனமாடினர். படத்திற்கு ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஜெயபாலன் தயாரிக்கிறார்.
Advertisement

Share it with your Friends