போங்கடா நீங்களும் உங்க விருதுகளும் - 2020 FilmFare விருதுகள் அறிவிப்பு - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..!


சமீப காலமாக விருது விழாக்களிள் வழங்கப்படும் விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்றே தெரியவில்லை. ஆனால், ரசிகர்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்றது FilmFare விருதுகள்.

ஆனால், இதுவும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

அதில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் சோயா அக்தர் இயக்கத்தில் வெளியான "கல்லி பாய்" படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்தது. ஆனால், மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 

இதனை தொடர்ந்து, #BoycottFilmFare என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 2.0 படத்தில் பட்சி ராஜாவாக நடித்த அக்சய் குமார் நடிப்பில் உருவான "கேசரி" என்ற படத்தில் வரும் "தேறி மிட்டி" என்ற பாடலுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


View this post on Instagram

A post shared by Manoj Muntashir (@manojmuntashir) on

ஆனால், அந்த விருதும் "கல்லி பாய்" படத்தில் இடம் பெற்ற 'அப்னா டைம் ஆயேகா' என்ற பாடலுக்கு வழங்கப்பட்டதற்கு "தேறி மிட்டி" பாடலாசிரியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவரது பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் இந்த FilmFare விருது விழாவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

போங்கடா நீங்களும் உங்க விருதுகளும் - 2020 FilmFare விருதுகள் அறிவிப்பு - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..! போங்கடா நீங்களும் உங்க விருதுகளும் - 2020 FilmFare விருதுகள் அறிவிப்பு - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.