2021 தேர்தலில் நடிகர் விஜய் இந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்..? - வைரலாகும் தகவல்..!


2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களும், திரு.மு.கருணாநிதி அவர்களும் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் இது.

தமிழகத்தின் தலைமைக்கான வெற்றிடம் இருக்கின்றது. ஆனால், அதை யார் நிரப்ப போகிறார்கள் என்பது கேள்விக்குறி. ஒரு பக்கம், அர்விந்த் கேஜ்ரிவால், மோடி மற்றும் ஜகன் மோகன் ரெட்டி போன்றவர்களை தேர்தலில் பெரும்பான்மையாக ஜெயிக்க வியூகம் அமைத்து கொடுத்த பிரஷாந்த் கிஷோர் என்ற வட இந்தியரை தமிழக சட்ட மன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வாடகைக்கு எடுத்துள்ளது.

மறுபக்கம், அதிமுக, பா.ஜ.க, ரஜினி, கமல், சீமான், இன்ன பிற உதிரி கட்சிகள் தனித்தனியாக நின்று கொண்டிருகின்றன. இப்படி இவர்கள் பிரிந்து நிற்பது தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை எளிமையாக்கி விடும்.

இதனால், இப்படி திமுகவிற்கு எதிராக நிற்கும் கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார்களா..? அல்லது தனியாக நின்று திமுகவின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுப்பார்களா..? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும். 

இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு ஆதரவாக நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என கூறுகிறார்கள். இதற்க்கான, வேலைகள் நடந்து வருவதாகவும் ரஜினியின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு வெளியான கையோடு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.


மேலும், தற்போது ஆளும் மற்றும் எதிர்கட்சியில் இருக்கும் முக்கிய தலைகள் பலரும் ரஜினியின் கட்சியில் சேர விண்ணப்பம் போட்டுள்ளார்களாம். ஏற்கனவே, நடிகர் விஜய் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். நம் மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என ஓப்பனாக பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் மட்டுமன்றி பிரபல நடிகர்கள் பலரும் ரஜினிக்கு ஆதரவாக தேர்தல் களம் காணவுள்ளனர் எனவும், அதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் விஜய் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் உறுப்பினராக இணைவாரா..? அல்லது பிரச்சாரம் மட்டும் செய்வாரா..? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Advertisement

Share it with your Friends