இந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..!
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் E.V.P ப்லிம் சிட்டியில் சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இந்த படப்பிடிப்புக்கு நேற்று முன்தினம் செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தை நேரில் பார்த்த நடிகை காஜல் அகர்வால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
மூன்று பேரின் உயிர் இவரது கண் முன்னே போயுள்ளது இவருக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாது இவர்கள் மூவரும் காஜல் அகர்வாலிடம் பேசிக்கொண்டிருந்த அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தது அவரை மிகவும் பாதித்துள்ளது என கூறுகிறார்.
விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற காஜல் அகர்வால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்து வருகிறாராம். இந்நிலையில், வேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அவர் இன்னும் இரண்டு வாரத்திற்கு படப்பிடிப்பிற்கு என்னால் வர முடியாது என கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இவரது முடிவால் படப்பிடிப்பு இரண்டு வாரம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..!
Reviewed by Tamizhakam
on
February 21, 2020
Rating:
