இந்தியன் 2 படத்தில் தன்னுடைய "கெட்டப்" - கேரவேனில் இருந்து காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..!


நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் பரத்தின் "பழனி" படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமான போது, இவரெல்லாம் ஹீரோயினா என்று பலரும் ஏளனமாக பேசினார்கள். 

ஆனால், தன்னுடைய திறமையால் இன்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் அம்மணி. சினிமாவை பொறுத்த வரை, அதிகமான புகழ் பெற்ற பிரபலங்கள் காணாமல் போவதும், கிண்டலடிக்கப்ட்ட பிரபலங்கள் வளர்ந்து நிற்பதும் சகஜம். 

இப்போது, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "இந்தியன் 2" படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். 

இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்திடாத மிக வித்தியாசமாக வயதான பெண் கெட்டப்பில் நடிக்கிறார் என எதிர்பார்க்கபடுகிறது. 

இந்நிலையில், தற்போது இந்தியன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவேனுக்குள் மேக்கப் போடும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் தன்னுடைய முகத்தை மறைத்துவிட்டார். 


இந்தியன் 2ல் நடிக்க துவங்கியதை தான் இதன் மூலம் அறிவித்துள்ளார் அவர். முகத்தை மறைத்துள்ளதால் அவர் வயதான தோற்றத்தில் தான் நடிக்கிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
Advertisement

Share it with your Friends