அநியாயமாக பறிபோன 3 உயிர்கள் - எல்லாத்துக்கும் அவரு தான் காரணம் - செம்ம கடுப்பில் கோடம்பாக்கம்..!


கோடம்பாக்கம் என்றால் நடிகர்கள், நடிகைகள் அல்ல. சினிமாவில் பணிபுரியும் லைட்மேன், ஸ்டன்ட் மாஸ்டர்கள், சண்டை கலைஞர்கள், மேக்கப் மேன், சவுண்ட்மேன் மற்றும் துணை நடிகர்கள், நடிகைகள் தான்.

இவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சமீபத்தில் பறிபோன மூன்று உயிர்கள். இந்த விபத்திற்கு பிறகு தங்களுக்கு நடக்கும் கொடுமைகள்ஒவ்வொன்றாக வெளியே சொல்லி வருகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

தினசரி கூலி கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால், அதை பண்றேன், இதை பண்றேன் என கோடி கோடியாக செலவு செய்வார்கள். பேட்டா காசு 100 ரூபாய் கேட்டால் கூட கொடுக்க மாட்டார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் என்ன..? படத்தின் சூட்டிங்கை 6 மணிக்கு முடிக்கிறார்கள்.

அவர்கள் பேக்கப் செல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் வியர்வை சிந்தி லைட், கேமரா, அது இது என எல்லாவற்றையும் பேக்கப் செய்து வைப்படதற்கு எங்களுக்கு 8 மணி ஆகி விடுகின்றது. முடித்து விட்டு சென்னை ட்ராபிக்கில் வீடு செல்ல 12 மணி 1 மணி ஆகி விடுகின்றது.

இயக்குனர்கள் பிரமாண்டம் என்ற பெயரில் எதை எதையோ செய்ய சொல்கிறார்கள். ஆனால், அதில் பணி புரியும் ஆட்களின் பாதுக்காப்பு குறித்து கவலை படுவதே இல்லை.

அதை செய், இதை செய் என்று சொல்வது மட்டுமே அவர்கள் அத்தனையும் செய்வது நாங்கள் தான். அப்படிபட்ட எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது வரி பிடித்துக்கொண்டு தான் கொடுகிறார்கள். மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம் சம்பாதிக்கும் எங்களிடம் வரி,TDS பிடித்துக்கொண்டு சம்பளம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.

சமீபத்தில், மூன்று உயிர்கள் பறிபோனதற்கு காரணமே அந்த படத்தின் பிரமாண்ட இயக்குனர் தான்.இன்னும் 10 பேர் கை,கால் உடைந்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருகிறார்கள். 

அவருடைய பிரமாண்ட பசிக்கு இந்த அப்பாவி தொழிலாளர்கள் உயிர்தான் உணவா..? என்கிறது கோலிவுட். படத்தில் பிரமாண்டத்தை காட்ட முயலும் அவர், தன்னை நம்பி வரும் தொழிலாளர்கள் மீது கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 

இனி வரும் காலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே இதுபோன்ற பிரமாண்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

அதே சமயம், அது அவர்களுடைய வேலை. இத்தனை ஆபத்துகள் இருக்கின்றது என்று தெரிந்தபின்பும் கவனமுடன் வேலை செய்ய வேண்டும். இது விபத்தே தவிர, திட்ட மிட்ட செயல் அல்ல. இந்த பழியை தூக்கி இயக்குனர் மீதோ, வேறு யாரின் மீதோ சுமத்துவது அபத்தமாகும் என்றும் ஒரு தரப்பினர்  கூறி வருகிறார்கள்.

அநியாயமாக பறிபோன 3 உயிர்கள் - எல்லாத்துக்கும் அவரு தான் காரணம் - செம்ம கடுப்பில் கோடம்பாக்கம்..! அநியாயமாக பறிபோன 3 உயிர்கள் - எல்லாத்துக்கும் அவரு தான் காரணம் - செம்ம கடுப்பில் கோடம்பாக்கம்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.