தன்னை விட 30 வயது அதிகமான ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..!


தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் முன்னணி நடிகை என்ற நிலைக்கு உயர முடியாமல் போராடி வருகிறார் நடிகை அஞ்சலி.

இவர் நடித்திருந்த "நாடோடிகள் 2" படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதில் அஞ்சலியின் நடிப்பு நல்ல விமர்சனங்கள் பெற்றது. தற்போது, காண்பது பொய், பிக்பாஸ், "ஓ" என சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. 

இந்நிலையில், அடுத்து அவர் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவின் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. 60 வயதாகும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்கிறார். 

அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா என பல நடிகைகளை அணுகியுள்ளனர். ஆனால் இறுதியில் அஞ்சலி தான் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். 

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் அஞ்சலி, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக டிக்டேட்டர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை விட 30 வயது அதிகமான ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..! தன்னை விட 30 வயது அதிகமான ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.