நிஜமாகவே உங்களுக்கு 43 வயதா..? - சிம்ரன் வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழில் "நேருக்கு நேர்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். 

சென்ற வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட இவர் முதன் முறையாக டிக் டாக்கில் இணைத்துள்ளதாக அறிவித்திருந்தார். 

மேலும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட டிக் டாக் வீடியோ மிக பெரிய அளவில் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட போவதாக அறிவித்திருந்தார். 

அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி ஒரு நாளில் 13 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது சிம்ரன் இந்த சாதனைக்கு காரணமான தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் நடிகை சிம்ரன் இன்னும் இளமை துள்ளலுடன் அசத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா..? என வாயை பிளந்து வருகிறார்கள்.

நிஜமாகவே உங்களுக்கு 43 வயதா..? - சிம்ரன் வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! நிஜமாகவே உங்களுக்கு 43 வயதா..? - சிம்ரன் வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.