5 வருட காதலியை கரம் பிடித்தார் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நடிகர் வினோத் - மணப்பெண் இவர் தான் - இதோ க்யூட் போட்டோஸ்..!


"சுந்தரி நீயும் சுந்தரம் நானும்" என்ற தொலைக்காட்சி சீரியல் நடிகர் வினோத் கடந்த 12-ம் தேதி ரகசிய திருமணம் செய்துகொண்டார். அதில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிந்து என்கிற ஹேமலதா என்ற பெண்ணை தான் வினோத் திருமணம் செய்துள்ளார். 


இந்த திடீர் திருமணம் பற்றி வாய் திறக்காமல் இருந்த வினோத். தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆம், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.


அவர் கூறியதாவது, "இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஆமாங்கோ! கல்யாணம் ஆகிடுச்சுங்கோ. இந்த திருமணத்தை நடத்த உதவியாக இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு எங்களுடைய நன்றிகள். லவ் பண்ணுங்கோ பாஸ் லைப் நல்ல இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.

Advertisement

Share it with your Friends