தளபதி 65 - நான்கே படத்தில் நடித்துள்ள நடிகை விஜய்க்கு ஹீரோயின் - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து பிறகு ஒப்பு கொண்ட நடிகை..!


தளபதி 65 படத்தை இயக்கப்போவது அருண் ராஜா காமராஜ் என்று உறுதியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் நமக்கு வந்து கொண்டிருகின்றன.

அதன் படி, இந்த படத்தின் நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். தமிழில், இமைக்காநொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கதமிழன் என நான்கே நான்கு படங்களில் நடித்துள்ளார். 

தற்போது, அரண்மனை 3 படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் அம்மணி. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிகைஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் என கூறுகிறார்கள்.


முன்னதாக விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு அருண் ராஜா காமராஜிற்காக விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.


இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 - நான்கே படத்தில் நடித்துள்ள நடிகை விஜய்க்கு ஹீரோயின் - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து பிறகு ஒப்பு கொண்ட நடிகை..! தளபதி 65 - நான்கே படத்தில் நடித்துள்ள நடிகை விஜய்க்கு ஹீரோயின் - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து பிறகு ஒப்பு கொண்ட நடிகை..! Reviewed by Tamizhakam on February 10, 2020 Rating: 5
Powered by Blogger.