தளபதி 65 இயக்குனர் இவர் தான் - தயாரிப்பது யார் தெரியுமா..? - யாரும் எதிர்பார்க்காத கூட்டணி - மாஸ் அப்டேட்.!


விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தை இயக்க சுதா கொங்கராவை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோதுதான் விஜய் எப்படி சுதா கொங்கராவைத் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்த தகவல் கூட பரவியது. 

ஆனால், நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலேயே நடிக்கவுள்ளார். தளபதி 65 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. 

மாஸ்டர் செட்டில் லோகேஷ் சொன்ன இன்னொரு கதை நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே மாஸ்டரை அடுத்தும் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பது என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். லோகேஷின் கதை மட்டும் அல்ல அவர் நடந்து கொள்ளும் விதமும் விஜய்க்கு பிடித்துள்ளதாம். இதனால் தான் தனதுஅடுத்த படத்தையும் அவரிடமே கொடுத்துள்ளார்தளபதி.

மேலும், வரும் தீபாவளி பண்டிகையன்றே "தளபதி65" படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

தளபதி 65 இயக்குனர் இவர் தான் - தயாரிப்பது யார் தெரியுமா..? - யாரும் எதிர்பார்க்காத கூட்டணி - மாஸ் அப்டேட்.! தளபதி 65 இயக்குனர் இவர் தான் - தயாரிப்பது யார் தெரியுமா..? - யாரும் எதிர்பார்க்காத கூட்டணி - மாஸ் அப்டேட்.! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.