தளபதி 65 - ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனருடன் விஜய் கூட்டணி..! - ரசிகர்கள் வியப்பு..!


முன்னணி நடிகர் என்றாலே கைதேர்ந்த இயக்குனருடன் தான் கூட்டணி அமைப்பார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில் சினிமா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகி விட்டது. இளவட்ட இயக்குனர்கள் களத்தில் இறங்கி மாஸ் காட்டுகிறார்கள்.

ஹெச்,வினோத்,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் நரேன், கார்த்தி சுப்பராஜ் என இள வட்ட இயக்குனர்களின் கையில் சினிமா வந்துவிட்டது. அதற்கேற்றால் போல முன்னணி நடிகர்களும் இளம் இயக்குனர்களுடன் கூட்டணி வைக்க தொடங்கி விட்டனர்.

தற்போது, ஹெச்,வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நிலையில், மறு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இது இயக்குனராக உருவாக துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பச்சை கொடி என்றே சொல்ல வேண்டும். 

இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய தளபதி65 படத்தை மீண்டும் இளம் இயக்குனருடன் கை கோர்த்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், ராப் பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் தான் தளபதி 65 படத்தின் இயக்குனர்.


மான்கராத்தே படத்தில் இவர் நெருப்பு குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நெருப்பு குமாராகவே அறிமுகமாகி விட்டார். இவரை, அருண்ராஜா காமராஜ் என்பதை விட நெருப்பு குமாரு என்று தான் பல ரசிகர்களுக்கும் அடையாளம் தெரியும். கனா என்ற ஒரே ஒருபடத்தை மட்டுமே இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் நெருப்பு குமாரு..!
Advertisement

Share it with your Friends