"என் உடல் வளைவுகளை தழுவிக்கொண்டிருக்கிறேன்" - 89 கிலோ உடல் எடையுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..!


கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. 

ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த இவர் வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். 

வாரணம் ஆயிரம் படத்தை அடுத்து வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். 

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால், அவருடைய உடல் எடை கூடி இப்போது 89 கிலோ இருக்கிறார்.

இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது, என் உடல் வளைவுகளை தழுவிக்கொண்டிருக்கிறேன். நான் உடல் எடை அதிகரித்திருந்தாலும் என்னை நான் செக்ஸியாகவே உணர்கிறேன். அதனை எதுவும் தடுக்க முடியாது. மீண்டும் ஃபிட்டாக மாறுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். 

அதே நேரம், குண்டாக இருப்பதை நான் வெறுக்கவும் இல்லை. காரணம், என் மகனை பெற்றதால் தான் நான் குண்டாகியுள்ளேன். பிறகு, அதை நினைத்து நான் கவலைப்பட தேவையில்லைஎனகூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Sameera Reddy (@reddysameera) on

"என் உடல் வளைவுகளை தழுவிக்கொண்டிருக்கிறேன்" - 89 கிலோ உடல் எடையுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! "என் உடல் வளைவுகளை தழுவிக்கொண்டிருக்கிறேன்" - 89 கிலோ உடல் எடையுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.