சமந்தாவின் "96" தெலுங்கு ரீமேக் படத்தை பார்த்து விட்டு வந்து கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்..! - வைரலாகும் வீடியோ..!


விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான "96" திரைப்படம் பெரும்பாலன 90'ஸ் கிட்ஸ்களின் இதயத்தை துளைத்தது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

தமிழில் ராஜா ராணி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற காதல் திரைப்படம் "96". இந்த படத்தை இப்போது பார்த்தாலும் பலர் தன்னை அறியாமல் கண்ணீர் வீட்டு விடுவார்கள்.

இந்நிலையில், இந்த படத்தை "ஜானு" என்ற தலைப்பில் நடிகை சமந்தா ஜானுவாக நடிக்க, நடிகர் ஷர்வானந்த் ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை பார்த்தஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் திரையரங்கிற்கு வெளியே வந்து கண்ணீர்விட்டு கதறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Advertisement

Share it with your Friends