அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல - சனம் ஷெட்டி குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷன்..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விளம்பர பட நடிகர் தர்ஷன். இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மீது "தன்னை காதலித்து நிச்சயம் செய்த பின், திருமணம் செய்ய மறுகிறார்" என தேவதையை கண்டேன் தனுஷ் கணக்காக நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள பிக்பாஸ் தர்ஷன், விஷயம் இந்த அளவுக்கு வந்து விட்ட பிறகு நிச்சயம் அவரை திருமணம் செய்ய மாட்டேன். அதற்கு வாய்ப்பே இல்லை என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

தமிழில், அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் தர்ஷனும், இவரும் காதலித்தனர். நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் என் நடத்தை மீது, அபாண்டமாக பழி சுமத்தினார். 

என்னை, உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தினார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னிடம், 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டார். 

காதலித்து, நிச்சயதார்த்தம் செய்த பின், என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொலை மிரட்டலும் விடுக்கிறார். இதற்கு, அவரது நண்பர்களும் துணையாக உள்ளனர். அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கு பதிலளித்த தர்ஷன்,நிச்சயம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் இருந்தபடி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது எல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை.

மேலும், நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வெளியில் என் நண்பர்கள் வீட்டில் நடந்த ஒரு இரவு நேர பார்ட்டியில் சனம் ஷெட்டி அவரது முன்னாள் காதலனுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இந்த விஷயம் என்னுடைய நண்பர்கள் மூலம் எனக்கு தெரிய வந்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என பரபரப்பு பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisement

Share it with your Friends