ஐஸ்வர்யா ராஜேஷா இது..? - துளி மேக்கப் இல்லாமல் விமான நிலையம் வந்தவரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ்த் திரையுலகில் ‘நீதானா அவன்’ படத்தின் மூலம் கால் பதித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அது ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படமாக இல்லை. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டகத்தி’ படம்தான் ஐஸ்வர்யாவை திரையுலகுக்கு அடையாளம் காட்டிய படம். விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’, மணிகண்டன் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ என்று அடுத்தடுத்து வந்த படங்களால் டாப் லெவலுக்கு வந்து விட்டார். 

1990-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை நிருபித்தவர் என்பது வரைதான் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி இதுவரை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியும். 

ஆனால், அதனை தொடர்ந்து படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால் கிடுகிடுவென வளர்ந்தார். காக்கா முட்டை திரைப்படம் இவரின் நடிப்புக்கு பல விருதுகளை பெற்றுக்கொடுத்தது. சமீபத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,ஆந்திராவில் படப்பிடிப்பை முடித்து விட்டு விமான நிலையம் வந்த அவர் துளி மேக்கப் இன்றி வந்திருந்தார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகவே, ஐஸ்வர்யா ராஜேஷா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகிறார்கள்.

Advertisement

Share it with your Friends